பொதுவாக ஒவ்வொரு எண்ணெய் கொண்டு விளக்கேற்றிவதன் மூலம் ஒவ்வொரு பலன்களை பெறலாம். அந்த வகையில் எந்த எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் என்ன பலன் என்று பார்ப்போம்.
தீபங்கள் ஏற்றி இறைவனை வழிபடுவது இந்துக்களின் பாரம்பரியமாகும். விளக்கேற்றுவது ஆன்மீகத்தின் வெளிப்பாடு. விளக்கேற்றுவதால் அறியாமை இருள் விலகி, அறிவு பெருகுகிறது. வீடு புனிதமடைகிறது. வளமும் ஆரோக்கியமும் செல்வமும் அதிகரிக்கிறது. நமது வாழ்வின் பாவங்களை துடைக்கின்றது. மனதின் தீய எண்ணங்களை எரிக்கின்றது.
விளக்கில் ஊற்றி ஏற்றப்படுவதற்காக பலரும் பல வித எண்ணெய்களை பயன்படுத்துவர். ஆன்மீகத்தில் ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒரு பொருள் மற்றும் பலன் உண்டு. ஒவ்வொரு மனிதனின் தேவைகள் மற்றும் துயரங்களுக்கு ஏற்ப, விளக்குகளுக்கு எண்ணெய் ஊற்றி ஏற்றி அவர்கள் துயரங்களை களைந்து வீட்டிற்கு அமைதியை கொண்டு வரலாம்.
நல்லெண்ணெய்:
தூய்மையான நல்லெண்ணெய் தீபம் இறைவனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இதை கொண்டு விளக்கேற்றுவதன் மூலம் வீட்டில் உள்ள பீடைகள் அனைத்தும் ஒழியும். அதோடு நவகிரகங்களையும் இதன் மூலம் திரும்தி படுத்தலாம்.
விளக்கெண்ணெய்:
விளக்கெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றுவதன் மூலம் வீட்டில் உள்ளவர்கலுக்கு புகழ் வந்து சேரும்.
நெய்:
நெய் தீபம் ஏற்றுவதன் மூலம் வீட்டில் எப்போதும் சந்தோஷம் நிலைத்திருக்கும். அதோடு நவகிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
வேப்ப எண்ணெய்:
வேப்ப எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றுவதன் மூலம் கணவம் மனைவி இருவருக்குள் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் விலகி உறவு மேம்படும்.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெயில் விளக்கேற்றுவதால் விநாயகரின் அருளை பெறலாம். குலதெய்வத்தின் அருள் பெற்று மகிழ்தச்சியாக இருக்கலாம்.
மூன்று எண்ணெய் கலவை:
வேப்ப எண்ணெய், நெய் , இலுப்பை எண்ணெய் ஆகிய மூன்றையும், கலந்து தீபம் ஏற்றுவதன் பலனாக வீட்டில் செல்வம் நிலைத்திருக்கும்.
பஞ்ச தீப எண்ணெய்:
நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய் , இலுப்பைஎண்ணெய் ,மற்றும் பசுநெய் ஆகியவற்றை கலந்து செய்த எண்ணெய் பஞ்சதீப எண்ணெய். இந்த எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால், துன்பங்களை போக்கி எல்லா வளங்களையும் கொடுக்கும்.
I was reading some of your posts on this internet site and I conceive this website is real informative!
Retain posting.