கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். அதற்காக நாம் எந்த முயற்சியும் செய்யாமல் இருக்கக்கூடாது.
உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த நினைத்த காரியங்களை நிறைவேற்ற, நீங்கள் பிரம்ம முகூர்த்தத்தைப் பயன்படுத்தலாம்! நீங்கள் எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை மீண்டும், மீண்டும் நினைப்பதற்கும் அது நிறைவேறுவதற்கும் நல்ல நேரம் பிரம்ம முகூர்த்தம்!.
பிரம்ம முகூர்த்த ரகசியத்தைப் பற்றிக் கூறும்போது, அதிகாலையில் எழுவது பல நன்மைகளைத் தரும், என சாஸ்திரங்கள் கூறுகின்றன! சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்றிருப்பதால், அன்றைய தினம் நல்லெண்ணெய் குளியல் செய்வது மிகவும் சிறப்புடையது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன! பிரம்ம முகூர்த்தத்தில் திதி வார நட்சத்திர யோக தோஷங்கள் கிடையாது. அந்த நேரம் எப்போதுமே சுபவேளைதான் இந்நேரத்தில் எழுந்து குளித்து இறை வழிபாட்டைச் செய்து நமது வேலையை செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான். பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம், சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது ஐதீகம்! ஆரம்பிப்பது சரியாக இருந்தால் முடிவும் சரியாக இருக்கும். ஆரம்பிக்கும் நேரம் நேரம் பிரம்ம முகூர்த்தம் ஆக இருந்தால், நம் வாழ்வில் வெற்றி இடம்பெறும். ஆகையால் சூரியனுக்கு முன் எழுந்து, சூரியனை விட உயர்ந்த வாழ்க்கையை நீங்கள் நிச்சயம் அடைய முடியும். கோடீஸ்வரர்களை உருவாக்கிய நேரம் பிரம்ம முகூர்த்த நேரம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். இன்றைக்கு வாழ்க்கையில் வெற்றி பெற்ற அனைவருமே அதிகாலையில் எழுந்தவர்கள்தான். பெரிய சாதனை படைத்த மிகப் பெரும் கோடீஸ்வரர்கள் அனைவருமே இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் எழுந்து செயல்பட ஆரம்பிக்கிறார்கள்.
சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்பர். அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் கண்டிப்பாக தூங்கக்கூடாது. தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச் செய்யவேண்டும். இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புண்ணியத்தை தரும். உடலுக்கும், உள்ளத்துக்கும், ஊட்டம் தருவது காலையில் கண் விழிப்பதாகும்! அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்கியமாக இருக்கும். சத்தம் இல்லாமலும், பரபரப்பு இல்லாமலும், காரியங்கள் சிறப்பாக முடியும். சுத்தமான காற்று இருக்கும் அதிகாலைப் பொழுதில் வெளியே நடந்து செல்வதால்,சுத்தமான காற்று சுறுசுறுப்பை உண்டாக்கி நல்ல உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
பிரம்ம முகூர்த்தம் என்பது, பிரம்மா எனப்படும் நான்முகனை குறிக்கின்றது. படைக்கும் தொழில் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதி அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார். பிரம்ம முகூர்த்தத்தில் திதி வார நட்சத்திர யோக தோஷங்கள் கிடையாது. அந்த நேரம் எப்போதுமே சுபவேளைதான் இந்நேரத்தில் எழுந்து குளித்து இறை வழிபாட்டைச் செய்து நமது வேலையை செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான். எனவேதான் பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் மற்றும் வீடு கிரகபிரவேசம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது!
அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. உஷத் என்னும் பெண் தேவதையைப் பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அந்த தேவதை தோன்றிய பின்பே சூரியன் உதயமாகின்றதாம். இதனாலேயே விடியற்காலை உஷத் காலம் எனப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கி சாய்வதால், அந்த வேளையில் குளித்து விட்டு இறைவனை வணங்குவது விசேஷமாக சொல்லப்படுகிறது. இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக காணப்படுகிறது. பிரம்ம முகூர்த்தம் என்பது எல்லாமே ஒரு குறிப்பிட்ட நேரத்தில், வீட்டில் வேலை செய்ய வேண்டும். பின்பு குறிப்பிட்ட நேரத்தில் ஓய்வு எடுக்க வேண்டும். உறங்க வேண்டிய நேரத்தில் விழித்திருந்தால், நோய்கள் எல்லாம் நம்மை நோக்கி வரும். அதனால்தான் நமது பெரியோர்கள் அதிகாலையில் எழ வேண்டும் என்றார்கள். அந்த நேரத்தில் இறைவனிடம் வைக்கின்ற அனைத்துவித பிரார்த்தனைகள் கண்கூடாகவே நிறைவேறுகிறது!
செல்போன் வருகைக்குப் பிறகு இன்றைய இளைய தலைமுறையினர் இரவு நேரம் கழித்து உறங்கச் செல்கின்றனர். இரவு சீக்கிரம் உறங்கி அதிகாலையில் எழுவது நல்லது. பிரம்ம முகூர்த்த நேரமான 4 முதல் 5.30 மணிக்குள் கண் விழிப்பது நல்லது. சூரிய உதயத்திற்கு முன்பே எழவேண்டும். இயற்கை நமக்கு உணர்த்தும் உண்மை அதுதான். நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும். சூரியக்கதிர்களினால் கிடைக்கும் வைட்டமின் டி நமக்கு நேரடியாக கிடைக்கும். அதிகாலை எழுவதால் நமக்கு நிறைய நேரம் கிடைக்கும். தியானம் செய்யலாம். இறைவழிபாடு செய்வது நன்மை தரும். அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை வருகின்ற சூரிய ஒளிக் கதிர்கள் மூலையின் நடுப்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியை இயங்கச் செய்கிறது. சூரிய ஒளிக் கதிர்கள் உடல்மீது படும்படியும், கண்களுக்கு நீலநிற வானத்தின் ஒளிக்கதிர்கள் தெரியும்படியான நடைப்பயிற்சி செய்யும்போதுதான் பீனியல் சுரப்பி இயங்குகிறது. பீனியல் சுரப்பியிலிருந்து மெலட் டோனின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. காலை 6.00 மணிக்கு பிறகு மெலட்டோனின் என்ற திரவம் சுரப்பது நின்று விடுகிறது. அதிகாலையில் முதல் முதலாக நமது உடலில் சுரக்கும் இந்த திரவமே மூளைக்கும் இருதயத்திற்கும், மூளைக்கும் தண்டுவடத்திற்கும், மூளைக்கும் சிறுநீரகத்திற்கும் தொடர்பை ஏற்படுத்துகிறது. மின்சாரம் மற்றும் மின்காந்த ஆற்றல்களை உடல் முழுவதும் உள்ள செல்களுக்கும், நரம்பு இணைப்புகளுக்கும் கிடைக்கச் செய்கிறது. மெலட்டோனின் ஹார்மோன்தான் 24 மணி நேரமும் உடலில் நடைபெறும் அனைத்து செயல்களையும் நடுநிலைப்படுத்துகிறது. தினசரி உடல் ஆரோக்கியம் அனைத்திற்கும் மெலட் டோனின் திரவ உற்பத்தியே முதல் காரணமாக உள்ளது. தனிமனிதர் உடல் ஆரோக்கியம் என்பது அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சூரிய ஒளியில் நடைப்பயிற்சி செய்யும்போதும், இரவு 9.00 மணிக்கு முன்பே உறங்குவதால் 50% அதிகமாக மெலட் டோனின் திரவம் உருவாக்கப்படுகிறது . நினைத்தது நிறைவேறும்: உங்கள் வாழ்வில் மாற்றத்தை சரி செய்ய லட்சுமி கடாக்ஷத்துடன், நினைத்த காரியங்களை நிறைவேற்ற, நீங்கள் இந்த பிரம்ம முகூர்த்தத்தைப் பயன்படுத்தலாம்! நீங்கள் எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை மீண்டும், மீண்டும் நினைப்பதற்கும் நல்ல நேரம் பிரம்ம முகூர்த்தம்! அதுபோல் நமது மனதில் இருக்கும் எண்ணங்களை வைப்பதற்கான நேரம் தான் இந்த பிரம்ம முகூர்த்த நேரம். உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பிரம்ம முகூர்த்த தினம் தினமும் காலையில் தொடர்ந்து எந்த விஷயங்களை செய்கிறோமோ அதில் நாம் மாபெரும் வெற்றியை அடைய முடியும். நாளை முதல் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து பழகுங்கள்.. கோடீஸ்வர யோகம் உங்களை தேடி வரும்.